Thursday 12 December 2013

குடிக்கறது தப்பா அப்புறம் எதுக்கு டாஸ்மாக்ல விக்கறாங்க - விஜயகாந்த்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் சொன்னது நம்மளை கேள்வி கேக்க செய்கிறது. அவர் கேக்கறது தப்பு இல்லனது தான் நமக்கு தோணுது. தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை அதிகமாக தெரந்து கொண்டு தான் போய்ட்டு இருக்கு. இலாபம் எங்கயோ போய்ட்டு தான் இருக்கு

இயற்க்கை மது கள்ளுக்கு தடை தமிழ்நாட்டில். இது கொஞ்சம் சிந்தனை செய்ய வைக்கிறது. கள் இயற்க்கை உற்பத்தி அதிகம் பண்ண முடியாது. மக்கள் அதிக பேர் மதுவுக்கு அடிமை ஆக மாட்டார்கள். இவர்கள் கேள்வி கேட்பார்கள் ஆகையானால் இவர்களுக்கு மதுவை கொடுத்து சோம்பேறிகளாக மாற்றி அரசு இவர்கள் வாக்கை எடுக்கிறது தான்

பள்ளி மாணவர்கள் குடிக்க ஆரம்பித்து விட்டார்கள். இந்த சமுதாயம் எங்க போய்ட்டு இருக்குனு தெரியவில்லை. இங்கு அரசிடம் குடி இருக்கறது. சுகாதாரம் கல்வி தனியாரிடம் இருக்கிறது.

எழுவது என்பதுகளில் குடித்தால் வீட்டில் இருப்பவர்கள் சமுதாயம் அவர்களை மதிக்காது. இப்பொழுது மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்க்கும் பெண்களே குடிக்கிறார்கள் குடிப்பவர்களையும் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்ட்கிறார்கள். எல்லோருக்கும் தெரியும் குடி உடல் நலத்துக்கு கேடு என்று இருந்தாலும் குடிக்கிறார்கள்


Monday 9 December 2013

ஆம் ஆத்மி வந்தது வென்றது சென்றது

ஆம் ஆத்மி கட்சி வெற்றி தேசிய கட்சிகள் அனைவரையும் சிந்திக்க வைத்த்து இருக்கிறது. இன்று ஒரு செய்தி படித்த்து அதிர்ந்து விட்டேன். ஆம் ஆத்மி கட்சி பாஜாவுக்கு ஆதரவு தர உள்ளது சில நிமந்தனைகளோடு என்று  பிரசாந்த் பூஷன் கூறியது அதிர்ச்சி செய்தி தான்

இரு கட்சிகள் வேண்டாம் என்று வாக்கு போட்ட மக்களுக்கு இது அதிர்ச்சி செய்திதான். என்ன பொறத்தவரை ஆம் ஆத்மி மறுத்தேர்தலுக்கு ஆயுத்தம் ஆவது நல்லது. ஏன் என்றால் இவர்கள் கட்சி நிதி தரவேண்டியது இல்லை. பிற கட்சிகள் போல் சில பல கோடிகளை செலவு பண்ண தேவை இருக்காது. இவர்கள் மக்களிடம் நிதி பெற்று தேர்தலில் நிக்கலாம். கட்சி வேலை செய்ய படித்த இளைங்கர்கள் இருக்கிறார்கள். இப்படி சொல்லிக்கிட்டே போகலாம்

விமசர்கள் ஆம் ஆத்மி பாஜக இருவரும் தங்கள் ஈகோ விட்டு கைகோர்க்கலாம் என்று கூறுகிறார்கள். ஏனென்றால் மக்கள் வரி பணம் வீணாகும் மறு தேர்தல் நோக்கி சென்றால். இங்கு மக்கள் பணம் பல லட்சம் கோடிகளாக சொரந்த படுகிறது

மக்கள் மாற்று அரசியலை முன்வைத்த்து இருக்கிறார்கள் இவர்களை ஆம் ஆத்மி ஏமாற்றாது என்று நம்புவோம். இவர்கள் மக்களாக இருந்து மக்களுக்கு பணி செய்வார்கள் என்று நம்புவோம்

இவர்கள் காங்கிரஸ் அல்லது பாஜாகவோடு கைகோர்த்த்தால் இவர்கள் வந்த வேகத்தில் காணாமல் போய்விடுவார்கள். ஆம் ஆத்மி வந்தது வென்றது சென்றது என்று ஆகிவிடும்