Monday, 9 December 2013

ஆம் ஆத்மி வந்தது வென்றது சென்றது

ஆம் ஆத்மி கட்சி வெற்றி தேசிய கட்சிகள் அனைவரையும் சிந்திக்க வைத்த்து இருக்கிறது. இன்று ஒரு செய்தி படித்த்து அதிர்ந்து விட்டேன். ஆம் ஆத்மி கட்சி பாஜாவுக்கு ஆதரவு தர உள்ளது சில நிமந்தனைகளோடு என்று  பிரசாந்த் பூஷன் கூறியது அதிர்ச்சி செய்தி தான். 

இரு கட்சிகள் வேண்டாம் என்று வாக்கு போட்ட மக்களுக்கு இது அதிர்ச்சி செய்திதான். என்ன பொறத்தவரை ஆம் ஆத்மி மறுத்தேர்தலுக்கு ஆயுத்தம் ஆவது நல்லது. ஏன் என்றால் இவர்கள் கட்சி நிதி தரவேண்டியது இல்லை. பிற கட்சிகள் போல் சில பல கோடிகளை செலவு பண்ண தேவை இருக்காது. இவர்கள் மக்களிடம் நிதி பெற்று தேர்தலில் நிக்கலாம். கட்சி வேலை செய்ய படித்த இளைங்கர்கள் இருக்கிறார்கள். இப்படி சொல்லிக்கிட்டே போகலாம். 

விமசர்கள் ஆம் ஆத்மி பாஜக இருவரும் தங்கள் ஈகோ விட்டு கைகோர்க்கலாம் என்று கூறுகிறார்கள். ஏனென்றால் மக்கள் வரி பணம் வீணாகும் மறு தேர்தல் நோக்கி சென்றால். இங்கு மக்கள் பணம் பல லட்சம் கோடிகளாக சொரந்த படுகிறது. 

மக்கள் மாற்று அரசியலை முன்வைத்த்து இருக்கிறார்கள் இவர்களை ஆம் ஆத்மி ஏமாற்றாது என்று நம்புவோம். இவர்கள் மக்களாக இருந்து மக்களுக்கு பணி செய்வார்கள் என்று நம்புவோம். 

இவர்கள் காங்கிரஸ் அல்லது பாஜாகவோடு கைகோர்த்த்தால் இவர்கள் வந்த வேகத்தில் காணாமல் போய்விடுவார்கள். ஆம் ஆத்மி வந்தது வென்றது சென்றது என்று ஆகிவிடும். 

No comments:

Post a Comment